இலங்கையில் சுமார் 60, 000 பேர் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சுமார் 2 லட்சம் பேர் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் அநேக சந்தாப்பங்களில் இந்தியாவிலிருந்து இந்தப் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் நாட்டுக்குள் கடத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் கடல் வழியைப் பயன்படுத்தியே இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்