கோப்பாய் பகுதியில் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

down7#யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை)  குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மேற்படி பிரதேசத்திற்கு  தகவல் சேகரிக்க சென்ற போது இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

படுகாயமைடந்த இருவரும் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.