திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், மருதமுனை கஸ்ஸாலி வீதியில் வசித்து வந்த 23 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா சென்ற நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.