புத்தளம் உடப்பு – தெலும்வத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடு வலுவடைந்தமையே இதற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் பலியானவர் 45 வயதான குடும்பப் பெண் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.