அஜித்துக்காக ரெண்டு வாரம் காத்திருக்கும் தனுஷ்

தல அஜித்துக்கு தமிழ்நாட்டில் எத்தனை பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது என்பது தெரிந்ததே. அஜித் படம் வெளியாகும் தினம் ஒரு திருவிழா போன்று இருக்கும் என்பதால் கூடுமானவரை அவர் படம் ரிலீஸ் ஆகும் நாளில் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. தூங்காவனம் போன்ற படங்கள் விதிவிலக்குDhanush-Ajith

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘விஐபி2’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும் அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு பின்னர் வெளியிடலாம் என்று காத்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி ‘விஐபி 2’ படத்தை தனுஷ் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி அஜித்தின் விவேகம்’ வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தே தனது விஐபி 2′ படத்தை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். ஏனெனில் கடந்த முறை ‘என்னை அறிந்தால்’ படம் ரிலீஸ் ஆகி ஒரே வார இடைவெளியில் தனுஷின் ”அனேகன்’ வெளியானதால் பல நல்ல தியேட்டர்கள் அந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.