பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராகும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்?

ast

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கான புதிய பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகும் வாய்ப்பு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஸ்ருவேட் மக்கில் இற்கு கிடைக்கவுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முதல் தெரிவாக அவரே உள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சம்பக ரணவக்கவும் பயிற்றுவிப்பாளர் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்துள்ளதுடன், அவருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டாக்காவில் இடம்பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கூட்டத்தின் பின்னர் பேசிய, சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். முதல் மூன்று மாதங்களுக்கு பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக ஸ்ருவேட் மக்கில்லையே தெரிவு செய்வதற்கான அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.