இயக்குனர் சங்கத் தேர்தலில் விக்ரம் வெற்றி ராமதாஸ் தோல்வி

yak

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நேற்று இடம்பெற்றது. இதில் புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தல் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் நேற்றுய தினம் சென்னை வடபழனியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் குறித்த தேர்தல் இடம்பெற்றது.

இந்த நிலையில் தேர்தல் நேற்று பிற்பகல் 5மணிக்கு முடிவடைந்ததை தொடர்ந்து வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. குறித்த தேர்தலில்இதில் விக்ரம் தலமையில் புதுவசந்தம் அணியும், புதிய அலைகள் என்ற பெயரில் இன்னுமொரு அணியும் போட்டியிட்டது. புதிய அலைகள் அணியில் சுயேட்சையாக ராமதாஸ் போட்டியிட்டார்.

குறித்த தேர்தலின் முடிவில் புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரம் வெற்றி பெற்று புதிய இயக்குனர் சங்கத்தின் புதிய தலைவராக பதவியேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.