வேற்றுகிரக வாசிகள் உள்ளார்களா, ஆமாம் எனில் அவர்கள் வசிக்கிறார்கள் என்ற மனிதர்களின் கேள்விக்கு பதிலளிக்கிற வகையில், விஞ்ஞானிகள் கிளீஸ் 832சி (Gliese 832c) என்ற கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேற்றுக் கிரக வாசிகள் குறித்து ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், வேற்றுக்கிரக வாசிகளை நாம் தொடர்புகொள்ள முயன்றால் அவர்கள் நம்மை அழித்துவிடுவார்கள். எனவே, அவர்களை நாம் தொடர்புகொள்ளாமல் இருப்பதுவே நலம்.
அப்படியில்லாமல், நாம் அவர்களை தொடர்புகொள்ள முயல்வோமெனில் நமக்கே இழப்புகள் நேரும் என தெரிவித்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங்.
வேற்றுகிரகவாசிகள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வது என்பது, கொலம்பஸை எதிர்கொண்ட செவ்விந்தியர்களின் கதை போல. அந்தக் கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகுந்த கவனமாக இருந்தால் மட்டுமே அழிவைத் தவிர்க்க முடியும் எனவும், ஆரம்பத்தில் மனிதர்கள் மட்டும்தான் இருப்பதாக நான் கருதினேன். ஆனால் இப்போது வேற்றுகிரகவாசிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங்.
கடந்த 2010 முதலே அவர் இத்தகைய எச்சரிக்கையை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.