யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் சம்மந்தப்பட்ட உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தின்பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கில், பிரதான சந்தேக நபரைத் தப்ப விட்ட குற்றத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான ஸ்ரீகஜன் தற்பொழுது அவரது உதவிப் பொலிஸ் பரிசாதகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் சேவையிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தற்பொழுது பொலிஸ் சேவையில் இல்லை. என்று பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.