கொழும்பிலிருந்து சென்ற பஸ் முழுமையாக தீபற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற அதிநவீன பஸ் ஒன்று தீபிடித்து எரிந்தமையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேகாலை, கலிகமுவ பிரதேசத்தின் நடுவீதியில் வைத்து சொகுசு பஸ் வண்டி திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று, பஸ் வண்டியில் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தீயை கட்டுப்படுத்துவதற்காக பலர் முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில் அந்த வண்டி முழுமையாக தீபற்றி எரிந்து சாம்பலாகியுள்ளது.

எனினும் தீயினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.