வட மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் விசாரணை

cidவடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த சிறிலங்கா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற முறைப்பாடு தொடர்பாகவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கொழும்பில் இருந்து சென்ற சிறப்பு காவல்துறைக் குழுவினர் யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகத்தில் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பசுபதிப்பிள்ளை, தியாகராசா ஆகியோரிடம் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 1 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டன.

மே 8ஆம் நாள் யாழ். நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் இடம்பெற்றன.