கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து அடிதடியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன் ஷிஜில் என்பவருக்கும், முல்லசேரியை சேர்ந்த ஹரிதாஸ் மகள் மாயாவுக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.
மாப்பிள்ளை தாலி கட்டிய பிறகு அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகள் திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
அதோ பார் காதலன்
தனக்கு தாலி கட்டிய ஷிஜிலிடம், தூரத்தில் நிற்கும் வாலிபரை காட்டி அவர் தான் தனது காதலர் என்றும், அவருடன் செல்லப் போவதாகவும் காதில் மெல்லக் கூறியுள்ளார்.
ஷாக்கான மாப்பிள்ளை
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷிஜில் தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். அதைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.
வாக்குவாதம் – அடிதடி
இரு வீட்டாருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. தகவல் போலீஸாருக்குப் போய் அவர்கள் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் விலக்கி விட்டனர். 1
5 லட்சம் திருப்பிக் கொடு
திருமணத்திற்கான செலவு ரூ.15 லட்சத்தை திருப்பித் தருமாறு மாப்பிள்ளை வீட்டார் கூறி விட்டனர். அதற்கு மணப்பெண் வீட்டார், ஒரு மாதத்தில் ரூ. 8 லட்சம் தருவதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.