அஜித்தின் விவேகம் திரைப்படம் ஆகஸ்ட் 24-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் லுக் முதல், வெளியான அனைத்து ஸ்டில்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, இந்த படம் ஆகஸ்டு 10-ம் தேதி வெளியாகும் என்று ஒரு தகவல் பரவி வந்தது.
ஆனால், அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வெளியாகும் என்று, படத்தின் இயக்குனர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதி வெளியானதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.