ரூ.200 க்கு பதிலாக ரூ.26 லட்சம் எடுத்த மாணவன் செய்த செயல்

ரூ.200 அழுத்தி 26லட்சம் எடுத்த மாணவன், பணத்தை எடுக்க பின்பற்றிய தொழில்நுட்பம்..!! அறிவியலை தாண்டிய ஆன்மிகம்

ஹைதராபாத் வசித்து வரும் அப்துல் லத்தீப், கல்லூரி மாணவராகிய இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

 

ஏடிஎம்மில் கார்டை செலுத்தியதும் கடவுச் சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார்.

ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் பணத்தை போலபோலவென வெளியே தள்ளியுள்ளது

அந்த ஏடிஎம்மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை, என்பது குறிபிடத்தக்கது

200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டு என்ன செய்தான்??

அந்த பணத்தை பார்த்த அவனுக்கு நினைவுக்கு வந்தது கடைசி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் அவர்கள் கூறிய இறுதி உரை..

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடுத்தவர்களின் பொருளாதாரம் குறித்த எந்த ஒரு விஷயமும் மக்காவை போன்று புனிதமானது என்று என்பது தான் அந்த உரை

நபிகள் நாயகத்தின் போதனையை பின்பற்றும் விதமாக தன்னுடைய நண்பனை அங்கேயே பணத்திற்கு பாதுகாப்பிற்கு நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக காவல்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. வங்கி அதிகாரிகளுக்கு ஒரே அதிர்ச்சி, அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே தான் இருந்துள்ளது.

அனைவரும், மாணவன் அப்துல் லத்தீபை கட்டி அணைத்து பாராட்டி உள்ளனர்.