பிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை பாட்டிக்கு விரதம் இருக்கும் பாரம்பரிய பழக்கம் தென் மாவட்ட பெண்களிடம் இன்றும் உள்ளது. இந்த விரதம் முழுக்க, முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதாகும்.
செவ்வாய் இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடுவார்கள். பச்சரிசி மாவுடன் வெல்லம், தேங்காய் கலந்து கொழக்கட்டை செய்வார்கள். அந்த கொழுக்கட்டைகள் பலவித வடிவங்களில் இருக்கும். இரவு அந்த கொழுக்கட்டைகளை அவ்வைக்கு படைத்து வழிபடுவார்கள். விடிய, விடிய இந்த அவ்வை பாட்டி பூஜை நடைபெறும்.
ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டை சாப்பிடவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வை பாட்டியை நினைத்து நடத்தப்படும் இந்த பூஜையில் பங்கேற்றால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று பெண்களின் நம்பிக்கை.
அது போல பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.