ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆலோசகர் சிறிலங்கா ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்துள்ளார்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின்  மூத்த ஆலோசகர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூத்த மனித உரிமைகள் ஆலோசகரான ஜூவான் பெர்னான்டஸ் என்ற அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.

Juan-Fernandez-mahesh

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும், இராணுவ மறுசீரமைப்புத் தொடர்பான பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்கள் குறித்தும் ஆராய்வதே இவரது சிறிலங்கா பயணத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் ஆலோசகர்களில் ஒருவரான ஜூவான் பெர்னான்டஸ், சிறிலங்கா பயணத்தின் ஒரு கட்டமாக நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா அமைதிப்படைக்கு சிறிலங்கா படையினரை அனுப்பும் போது கடைப்பிடிக்கப்படும் ஆய்வு முறை உள்ளிட்ட இராணுவ மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.