இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் மூலம் காய்சலால் பாதிக்கப்பட்டிருந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் உபாதைக் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய அசேல குணரட்னவுக்கு பதிலாக லஹிரு திரிமன்ன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும், சுழற்பந்து வீச்சாளர் லக்ஷான் சந்தகென் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். கை விரலில் காயம் ஏற்பட்டுள்ள ரங்கன ஹேத்துக்கு பதிலாக அவர் அணியில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி விபரம்: தினேஷ் சந்திமால்(அணித்தலைவர்), ஏஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரட்ன, நிரோசன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக, லஹிரு குமார, விஷ்வ பிரனாந்து, நுவன் பிரதீப்.
ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, மலிந்த புஸ்ப குமார, லக்ஷான் சந்தகென் மற்றும் லஹிரு திரிமன்ன ஆகியோர் அணியின் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.