யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வட்டா எனப்படும் சிறிய ரக வாகனமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவமானது யாழ்ப்பாணம் கைதடி வடக்கு மாகாண சபைக்கு முன்னால் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்றிருப்பதாகவும் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.