பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களை நடத்த தடை

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களை நடத்த தடை விதிக்கும் சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் பிற்பகல் 2 மணிவரை தனியார் வகுப்புக்களை நடததுவதற்கு தடை விதிக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நடவடிக்கை ஊடாக, ஞாயிறு பாடசாலைக்கு (தஹம்பாசல்) பிள்ளைகளை அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.