மெர்சல் படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தில் அவர் எந்த பாடலையும் பாடவில்லை என்பது அவரின் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

vijay1

நடிகர் விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த சில வருடங்களில் வெளியான பல படங்களில் அவர் ஒரு பாடலையாவது பாடுவதை வழக்காமாக வைத்திருந்தார்.

அது துப்பாக்கி, ஜில்லா, பைரவா வரை தொடர்ந்தது.
ஆனால், அட்லி இயக்கத்தில் அவர் நடித்து வரும் மெர்சல் படத்தில் அவர் எந்த பாடலையும் பாடவில்லை.

இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி நடக்கவுள்ளது.