சர்வதேச தரத்திலான உயர் கல்வியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Higher-Education

அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்த சர்வதேச தரத்திலான பல்கலைக்கழக நிறுவனம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

MIT நிறுவனம் மற்றும் கலிபோனியாவின் பர்க்லி பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தனியார் துறையினரின் முதலீட்டினை பெற்றுக் கொள்வது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலாப நோக்கமற்ற, பிணை மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணக்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க்து.