நியூசிலாந்தை சேர்ந்த எலெக்ஸ் ரீசியின் இலங்கையில் வாழும் வறிய மாணவர்களுக்கான மகத்தான சேவை!

இலங்கையில் வாழும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் கல்வி முகாம்களை நடத்தும் வெளிநாட்டவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

e1

நியூசிலாந்து க்ரைஸ்ட்சர்ச் நகரத்தை சேர்ந்த எலெக்ஸ் ரீசி (Alex Reese) என்பவரே இந்த மகத்தான சேவை செய்து வருகிறார்.

இலங்கையிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளை தெரிவு செய்து அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி முகாம் மற்றும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எலெக்ஸ் உதவி செய்து வருகின்றார்.

அந்த பிள்ளைகளுக்கு அவசியமான அனைத்து விளையாட்டு உபகரணங்களுகம் எலெக்ஸ் அறக்கட்டளையினால் இலவசமாக வழங்கப்படுகின்றது.

நியூசிலாந்து உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகின்ற ஸ்ரீமன் ரிசட் ஹேன்ட் உட்பட எலெக்சின் இந்த சேவையை பாராட்ட இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

e2