இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கொழும்பு,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இலங்கை அணி முதலில் பந்து வீசி வருகிறது.
இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்:-
இந்தியா,
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்கியா ரகானே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரிதிமான் சகா(கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்தர ஜடேஜா, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ்,
இலங்கை,
திமுத் கருணரத்னே, உபுல் தரங்கா, குசல் மெண்டிஸ், தினெஷ் சண்டிமால்(கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா(கீப்பர்),ரங்கனா ஹெராத், தில்ருவன் பெரேரா, மலிண்டா புஷ்பகுமரா, நுவன் பிரதீப்