ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை, கடவை பாதுகாவலர் காப்பாற்றிய செய்தி வெளியாகி உள்ளது.
கடவை பாதுகாவலர் அதிரடியாக செயற்பட்டு, தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை காப்பாற்றியுள்ளார்.
43 வருடங்களாக நாவலப்பிட்டிய கொன்தென்னாவ ரயில் கடவையில் சேவை செய்யும் பீ.ஏ.திலக்கரத்ன என்ற பாதுகாவலரே இந்த மகத்தான சேவையை செய்துள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பொடி மெனிக்கே என்ற ரயிலில் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதன்போது ரயில் கடவை மூடுவதற்கு தயாரான திலக்கரத்ன யாரோ ஒருவர் தண்டவாளத்தில் தலையை வைத்திருப்பதனை அவதானித்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட அவர் அருகில் இருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் உதவியுடன் தற்கொலை செய்ய முயற்சித்தவரை காப்பாற்றியுள்ளனர்.
அதுவரையில் ரயிலுக்கான சமிக்ஞை வழங்காமல் ரயிலை நிறுத்தி வைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.