புதிதாக அச்சிடப்பட்ட 200 ரூபாய்த் தாள்கள் எதிர்வரும் தீபாவளி தினத்திலிருந்து பாவனைக்கு விடப்படும் என மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1000 மற்றும் 500 ரூபாய் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் தாள்களும் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் பரிவர்த்தனைகளை எளிது படுத்தும் நோக்கில் புதிய 200 ரூபாய் தாள்கள் வெளியிடப்படவுள்ளன.
மேலும், பாவனைக்கு விடப்படவுள்ள 200 ரூபாய்த் தாள்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.