சுன்னாகம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் – மூவர் கைது

யாழ். சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

images (8)

நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும், மற்றொருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கடந்த சில தினங்களாக இவ்வாறு தொடர்ச்சியாக வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.