மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’, சீனுராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்’ படத்திலும், `இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குநர் கோகுல் உடன் `கஞ்சன் ஜங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதற்கிடையே விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புரியாத புதிர்’, `இடம் பொருள் ஏவல்’ ஆகிய இருபடங்களும் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இதில் `புரியாத புதிர்’ வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெபல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இப்படத்தை ரெஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கியிருக்கிறார். சாம்.சி.எஸ்.இசையில் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. சில காரணங்களால் படம் தள்ளிப்போன நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இதுஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி `ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். தன்யா நாயகியாக நடித்திருக்கிறார். டி.இமான் இசையில் கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
அந்த நாளில் `கருப்பன்’ வெளியானால், விஜய் சேதுபதியின் இருபடங்களும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் நிலை ஏற்படும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு `தர்மதுரை’, `ஆண்டவன் கட்டளை’, `ரெக்க’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.