பிஸியான வாழ்க்கையில், முழு நேர வேலை மற்றும் குழந்தைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் உங்கள் இலக்கை நோக்கி முன்னேர முடியாமல் இருக்கலாம். நீங்கள் ஒவ்வொரு நாளும் இயந்திரம் போல, வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் ஒரே மாதிரி இயங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் திரும்பி பார்ப்பதற்குள் வாழ்க்கை ஓடிவிடும். உங்களுக்கு வயதாகிவிடும். உடலில் வலிமை இல்லாமல் போகும். எனவே இளமையாக இருக்கும் போதே உங்களுக்கென ஒரு இலக்கை உருவாக்கிக் கொண்டு அதை அடைய போராடுங்கள்.
வாழ்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் இதுவரை நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள், என்ன சாதனை செய்தீர்கள், இப்போது எதை நோக்கி உங்கள் வாழ்க்கை செல்கிறது என்பது போன்ற யோசனைகளை செய்து உங்களது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்றே தெரியாமல், அற்பான சில விஷயங்களை செய்து கொண்டு முட்டாள் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அர்த்தமுள்ள எதையும் நோக்கி செல்லவில்லை. நீங்கள் அவ்வாறு வாழ விரும்புகிறீர்களா? உங்களது வாழ்க்கையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் உங்களுக்காக இதை செய்யமாட்டார்கள். உங்களது காலையை இவ்வாறு தொடங்குவதன் மூலம் உங்களது வாழ்க்கையை நீங்கள் மாற்றியமைக்க முடியும்.
1. 7 மணி நேரத்திற்கு அதிகமான தூக்கம் தண்ணீர் குடிப்பது மற்றும் சாப்பிடுவது போல போதுமான அளவு தூக்கமும் அவசியம். ஆனால் மில்லியன் காணக்கான மக்கள் சரியாக தூங்குவது இல்லை. இதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். தூக்கமின்மை பல பிரச்சனைகளை கொடுத்தாலும், சரியான தூக்கம் பல நல்ல விளைவுகளை தருகிறது. உங்களது நியாபக சக்தி அதிகரிக்கிறது, வாழ்நாள் அதிகரிக்கிறது, கவனசிதறல்களை குறைக்கிறது, கொழுப்பை குறைத்து, தசைகளின் அளவை உடற்பயிற்சியின் மூலம் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைக்கிறது, காபின் போன்ற பொருட்களின் நுகர்வு குறைகிறது, மனச்சோர்வு குறைகிறது, இது போல இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. நீங்கள் போதியான நேரம் தூங்காமல் என்ன செய்தாலும் அது வீண் தான். இலக்குகளை அடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுட்காலம் என்பது மிகவும் அவசியம்.
2. பிராத்தனை மற்றும் தியானம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கு பின்னர் பிராத்தனை மற்றும் தியானம் ஆகியவை உங்களது மனதை அமைதியாக்கவும், நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும் அவசியமாகிறது. பிராத்தனை மற்றும் தியானம் ஆகியவை கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இருக்க வேண்டும். இது உங்களுக்கு நன்றியுணர்வு மனநிலையை அளிக்கிறது. இதனால் உலகம் உங்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகளை வழங்கும். மக்கள் காந்தம் போன்றவர்கள். உங்களது நன்றி உணர்வு, நேர்மறையான எண்ணங்கள் அவர்களை கவரும். உங்களுடனும் அவர்கள் நன்றியுடன் நடந்துகொள்வார்கள். நன்றியுணர்வு வெற்றிக்கான திறவுகோள். எனவே தினமும் தியானம் மற்றும் பிராத்தனை மூலம் உங்களது மனதை வலிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
3. உடற்பயிற்சி உடற்பயிற்சியின் மூலம் 60 வயதிலும் 20 வயதின் துடிப்புடன் இருக்க முடிகிறது. நீங்கள் உலகில் உள்ள ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, உழைக்கும் மக்களை போல வாழ விரும்பினால், தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதிகாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம், தெளிவு மற்றும் ஊக்கத்தை தருகிறது. உடற்பயிற்சி உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடல் சோர்வின்றி உழைத்து உங்களது வேலையில் பெரிய வெற்றிகளை பெற முடிகிறது.
4. 30 கிராம் புரோட்டின் எடுத்துக்கொள்ளுங்கள் புரதச் சத்து நிறைந்த உணவுகள் மற்ற உணவுகளை விட நீண்ட காலம் நீடிக்கின்றன. ஏனெனில் அவை வயிற்றை விட்டு வெளியேற நீண்ட காலம் எடுக்கின்றன. மேலும், புரதம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது. முட்டையில் 6% புரோட்டின் உள்ளது. எனவே நீங்கள் முட்டை சாப்பிடலாம். முட்டை பிடிக்காதவர்கள் நட்ஸ் போன்ற புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
5. குளிர்ந்த நீரில் குளியல் குளிர்ந்த நீரில் குளிப்பது, உடல் ரீதியிலும் மன நலத்திலும் தீவிரமான மாற்றங்களை தர உதவுகிறது. இதனை நீண்ட கால வழக்கமாக்கி கொள்ளும் போது, உங்கள் உடலின் நோயெதிர்ப்பு, நிணநீர், சுற்றோட்ட மற்றும் செரிமான அமைப்புகள் உங்கள் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துவதற்காக இது உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பதால், எடை இழப்பிற்கு உதவுகிறது.
6. புத்தகங்களை படியுங்கள் சாதாரணமான மக்கள் பொழுதுபோக்கும் விஷயங்களை செய்கின்றனர். ஆனால் சாதிக்கும் மக்கள் தங்களை உயர்த்திகொள்வதற்காக புத்தகங்களை படிக்கின்றனர் அல்லது வளர்ச்சிக்கான ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுகின்றனர். சிலர் ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தை படித்து முடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். நீங்கள் ஆடியோ வடிவில் கிடைக்கும் புத்தகங்களை நடந்து செல்லும் போது அல்லது வாக்கிங் செல்லும் போது படித்தால், எளிதாக ஒரு வாரத்தில் ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிடலாம்.
7. உங்கள் நோக்கத்தை நினைவுபடுத்துங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய வேண்டிய, குறுகிய கால நோக்கம் மற்றும் நீண்ட கால இலக்குகளை பட்டியலிடுங்கள். அவற்றை படிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களது இலக்குகளை தினமும் படிப்பதால், நீங்கள் எதை நோக்கி பயணிக்க போகிறீர்கள் என்பது எப்போதும் உங்கள் மனதில் இருக்கும். மேலும் தினமும் அதற்காக உழைப்பீர்கள்.
8. தினமும் ஒரு செயல் தினமும் உங்களின் நீண்ட கால இலக்கிற்காக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுங்கள். மனதிறன் என்பது மிகவும் வலிமையானது. நீண்ட கால இலக்கை பற்றி மனதில் மட்டுமே வைத்துக்கொண்டிருப்பது காலப்போக்கில் அதனை வலிமை இழக்கச்செய்துவிடும். எனவே தினமும் உங்கள் நீண்ட கால இலக்கினை அடைய ஏதேனும் ஒரு செயலை செய்யுங்கள். தோல்விகளே முதலில் வரும் என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக உங்களது நீண்ட நாள் இலக்கினை அடைவதற்காக பாடுபடும்போது உங்கள் இலக்கு மிக தொலைவில் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். இவற்றை மட்டும் நீங்கள் தினமும் காலையில் செய்து முடித்துவிட்டால், நீங்கள் நாளின் மீதி நேரத்தை பற்றி கவலை பட தேவையில்லை. நாளின் சிறந்த தொடக்கமானது, உங்களது முழு நாளையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்.