-
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத் தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். முன்கோபத் தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்
-
சிம்மம்
சிம்மம்: புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். புதியவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
கன்னி
கன்னி: பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல் கள் வந்து நீங்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
-
துலாம்
துலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபா ரத்தில் போட்டிகள் குறையும். உத்யோ கத்தில் பழைய சிக்கல்கள் தீரும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
-
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மனஉளைச் சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ள வில்லை என்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
-
மகரம்
மகரம்: விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அசதி, சோர்வு வந்து விலகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள் வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
-
மீனம்
மீனம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார் கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.