பிரதேச மக்களுடன் இணைந்து செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, ஆலோசனை

யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் கும்பலினால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

download (14)

அதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று இரவு சுன்னாகமம் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் கும்பலினால் இரு இளைஞர்கள் மீது கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த கும்பலின் உறுப்பினர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக பிரதேச மக்களுடன் இணைந்து செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் இந்த இவ்வாறான கும்பல்களின் உறுப்பினர்களை கைது செய்யும் போது தகவல்களை நன்கு ஆராய்ந்த பின்னர் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.