பொலிஸ் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன் !

இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்குள் குத்தி குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

inkiriya

குடும்ப பிணக்கு காரணமாக கணவன், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

கணவனுக்கு எதிராக முறைப்பாடு செய்ய மனைவியை, பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே வைத்து கணவன் கத்தியால் குத்தியுள்ளார்.

நீண்ட காலமாக இந்த தம்பதியினருக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்தது என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த பெண் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.குறித்த பெண்ணின் தந்தையையும், பெண்ணின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இது குறித்து முறைப்பாடு செய்யவே குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற கணவர் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கத்தியால் குத்தி பெண்ணை காயப்படுத்தியுள்ளார்.

பொலிஸார் தலையீடு செய்து பெண்ணை ஹொரண வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.