அம்மாச்சி உணவகத்துக்கு சிங்களத்தில் பெயர் வைக்க வேண்டும் என்று கொழும்பு அரசு வற்புறுத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதைப்போன்ற உணவகம் அமைப்பதற்கு நடுவண் அரசிடம் நிதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே கொழும்பு அரசு மேற்படி நிபந்தனை விதித்துள்ளதை முதலமைச்சர் நேற்று வெளிப்படுத்தினார்.
‘அவர்கள் பணம் தருவதால் சிங்களப் பெயர் போடச் சொல்கின்றார்கள். சிங்களப் பெயர்தான் வைக்க வேண்டும் என்று காசு தரும்போதே சொல்லியிருந்தால் நாங்கள் காசு வேண்டாம் என்று சொல்லியிருப்போம்.
நீங்கள் நன்மை செய்வதாகச் சொல்லிதான் கொண்டுதான் தந்தீர்கள். தமிழர் பாரம்பரிய உணவகத்திற்கு சிங்களச் சொல் தேவையில்லை. இவ்வாறுதான் எங்கள் தனித்துவத்தை அழிக்கின்றார்கள்’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.