யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தின் எட்டாம் நாள் திருவிழா

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தின் எட்டாம் நாள் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய குறித்த திருவிழா இன்று எட்டாம் நாளாக தொடர்ந்து நடைபெறுகின்றது.

இவ்வாறு தினம் தோறும் நடைபெறும் கந்தனின் சிறப்பு பூஜைகள் மற்றும் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

அலங்காரக் கந்தன் வெளிவீதி வலம்வரும் காட்சியைப்பார்த்து பக்த அடியார்கள் மெய்சிலிர்த்துப்போனமை குறிப்பிடத்தக்கது.