விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை நடைமுறை படுத்தியிருந்தால் ரணிலே ஜனாதிபதி !!

தமிழீழ விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றிருந்தால் 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ravooop1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாற்பது ஆண்டுகளை பூர்த்தி செய்தமையை முன்னிட்டு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இதன் போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துரையாற்றினர்.

இதன்போது தன்னுடைய கருத்துரையின் போது, அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

1977 இல் அரசியலுக்குள் பிரவேசித்த ரணில்விக்ரமசிங்க, நுண்ணறிவும், துணிவும், பொறுமையும், நிதானமும் கொண்டவராக அரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய குணாம்சங்களைக் கொண்டவராக திகழ்கின்றார்.

நேர்மையாகச்செயற்படக்கூடிய அரசியல்வாதியாவார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதை தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.

நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கொள்கைப்பற்றுடனும், தன்நம்பிக்கையுடனும் கட்சியை வழிநடத்தி இறுதியில் வெற்றியின் வழிக்கு இட்டுச்சென்றார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த இடைக்கால அரசு கோரிக்கையை அவர் ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகிருப்பார்.

எனினும், நாட்டின் நலனை முன்னிறுத்தி அதை அவர் நிராகரித்தார். உலகநாடுகளிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், மக்கள் நலனை முன்னிறுத்தி அவர் செயற்பட்டார்.

கடந்த அரசில் நான் அமைச்சராக இருந்தேன். யுத்த வெற்றியை அடிப்படைவாத முறையில் கொண்டாடினர். இனங்களுக்கிடையில் குரோதத்தை தூண்டினார்கள்.

பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்த அரசில் அமைச்சராக இருந்ததையிட்டு கவலைஅடைகின்றேன்.

அவற்றுக்கெல்லாம் எதிராக எதிர்கட்சியில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குரலெழுப்பி இன ஒற்றுமையை மையப்படுத்தி செயற்பட்டார்.

அவருக்கு எமது கட்சி மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளா