கேப்பாப்புலவில் இருந்து இராணுவத் தலைமையகத்தை அகற்ற தீர்மானம் !

கேப்பாப்புலவில் இருந்து முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

koppapulavu

இதற்காக அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதன் மூலம், பொதுமக்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்.

அதேவேளை, வேறொரு இடத்தில் முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்துக்கு 48 மில்லியன் ரூபாவை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வழங்கவுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது,