நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக இனிவரும் காலங்களில் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் என்றும் இயற்கை வாயு மின்நிலையத்தை உடனடியாக அமைக்காவிடில் நாட்டு மக்கள் பாதிப்படையகூடும் எனவும் மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அசோக அபயகுணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் வரட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியளாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சார நெருக்கடி தற்போதே ஆரம்பித்துவிட்டது. அவசர நிலையில் கூடுதலான விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டிய நிலை தற்போது அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செப்டம்பர் மாத காலப்பகுதிக்குள் 76.4 கிகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அலகொன்றின் சாதாரண விலை கிலோவோட் மணித்தியாலத்துக்கு ரூ. 40.48 ஆக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலைமையின் கீழ் மின்சார நிலையங்களில் மின்சாரத்தை கொள்வனவு செய்தாலும் இல்லாவிட்டாலும் மூலதன செலவாக மாதத்திற்கு 210 மில்லியன் ரூபாய்கள் அவ் தனியார் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். அதன் சுமை இறுதியில் மின் பாவனையாளர்களுக்கே சுமத்தப்படும்.
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2012 பின்னர் மின் உற்பத்தி பிரதேசங்களில் குறைந்த நீர் அளவே காணப்படுகின்றது என தரவிடப்பட்டுள்ளது. தற்போது நீர்த்தேக்கங்களில் 450 கிகாவோட் காணப்படுகின்றது. அவ்வாறாயின் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 35 சதவீதம் ஆகும். அடுத்து மழை வரும் வரை இந் நீரை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும். அதனால் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் சபை மின் வெட்டை மேற்கொள்ள நேரிடுகின்றது. கனியஎண்ணெய் வழங்கல் தடைப்பட்டால் மின் வெட்டு மேற்கொள்ள நேரிடுகின்றது.
ஏற்கனவே புத்தளத்தில் 300 மெகாவோட் செயற்பட்டில் இல்லை. அதனால் கேள்வி சிறிதாக அதிகரித்தாலும் மின் கட்டமைப்பு சீர்குலைவதை தடுப்பதற்காக மின்சாரத்தை துண்டிக்க நேரிடுகின்றது. இதனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள அவசர மின்உற்பத்தி நிலையங்களும் போதாது என்பது தெளிவாகின்றது. மின்சாரத்துக்கான கேள்வி தற்போது 5 தசவீதம் வரையில் அதிகரித்தமையால் நிலைமை மிகவும் மோசமடையும்.
அதனால் 2018 ஆம் ஆண்டு முதற் காலாண்டில்; வரட்சி காலம் ஆரம்பித்ததும் அதிகளவில் தனியார் துறையிடமிருந்து அவசரமாக கனியஎண்ணெய் மின்சாரத்தை அரசாங்கம் உயர்விலைக்கு கொள்வனவு செய்ய நேரிடும். நீண்டகால மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு இன்னும் அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. அதனால் 2020 ஆம் ஆண்டின் வரட்சி காலங்களில் இந்நிலைமை மோசமடையும். புதிய மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் வரை இந்நிலைமை உக்கிரமாக காணப்படுமேயன்றி குறைவடையாது. உருவாகியுள்ள கனியஎண்ணெய் மாபியா வெற்றி பெறும் காலமாகும். மின் பாவனையாளர்கள் ஒப்பாரி வைக்கும் நேரமாகும்.
வருடாந்தம் அதிகரித்துவரும் மின்சார கேள்வியை பூர்த்தி செய்வதற்காக மின்சார சபையால் புதிதாக நீண்டகால மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்க முடியாமையே இந்நிலைமைக்கு காரணமாகும். புத்தளம் நிலக்கரி அனல்மின் நிலையத்தின் பின் கட்டமைப்பில் திட்டமிட்ட ரீதியான நீண்டகால மின்உற்பத்தி நிலையம் எதுவும் கட்டமைப்பில் சேர்க்கப்படவில்லை. சம்பூரில் 500 மெகாவோட் அனல்மின் நிலையைத்தை உருவாக்குவதற்கே பல தசாப்தங்களாக மின்சார சபை முன்மொழிந்திருந்தது.
அரசின் மின்சக்தி கொள்கைக்கு மாறாக அதனை அமைக்க முடியாமல் போனது. அரசின் கொள்கைகள் தெளிவானவை. 2030 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு மின்உற்பத்தி வளங்கள் மூலம் சூழல் நேய மின்சாரத்தை உற்பத்தி செய்வது அரசின் கொள்கையாகும். அதற்கு மாறான பெரும்பாலும் இலங்கையில் இல்லாத சூழலுக்கு மிகவும் மோசமான நிலக்கரி மின் உற்பத்தி செய்வதற்காக நிலையங்களை உருவாக்கும் திட்டமிடலையே மின்சார சபை இதுவரை காலமும் மேற்கொண்டது.
அதற்கு நிலக்கரி இலாபமானது என மின்சாரசபை நீண்ட காலமாக சொல்கிறது. ஆனால் மின்சார சபையின் அத்தர்க்கம் பிழையானது என்பதை அண்மையில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஆய்வின் மூலம் அரசு புரிந்துகொண்டது. தற்போது நிலக்கரியை விடவும் இயற்கை வாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் இலாபமானது என்பது தெரிய வருகின்றது. என்றாலும் இந்த யதார்த்தை ஏற்றுக்கொண்டு நாட்டை விபத்திலிருந்து விடுவிப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
மின்சார நெருக்கடிக்கு உடனடி குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, மற்றும் வலுசக்தி முகாமைத்துவமும் ஆகும். இயற்கை வாயு அனல்மின்நிலையத்தை உருவாக்குவதல் இடைக்கால தீர்வாகும்.
ஏற்பட்டுவரும் வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கு உடனடி வலுசக்தி தேவையாகும். அதில் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதே உடனடி தீர்வாகும். மிகவும் வினைத்திறன் கூடிய மின் உபகரணங்களை பயன்படுத்துதல். அவ் வினைத்திறன் மிக்க மின் உபகரணங்களுக்காக விசேட சலுகைகளை வழங்க அரசு கவனம் எடுக்க வேண்டும்.
இனிவரும் மூன்றாண்டுகளுக்குள் மேதிகமாக 1000 கிகாவோட் மணித்தியாலங்கள் என்றவாறு கட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அந்த மின்நிலையங்களை உருவாக்குவதற்காக காலம் இல்லை என்பதால் அதன் தேவை நிலக்கரி அனல் மின்நிலையங்களிலிருந்தோ, இயற்கை வாயு மின்நிலையங்களில் பெற்றுக்கொள்ளப்பட முடியாது. கனியஎண்ணெய் நிலையங்கள் மூலம் அந்த தேவைகளை பூர்த்தி செய்ய முயன்றாலும் அது செலவு அதிகமானதாகும். குறுகிய காலத்துக்கு மாத்திரம் அவ்வாறான மின்நிலையங்களை உருவாக்குவதற்கு நேரிடுகையில் அவற்றுக்கான முதலீடு வீணாகின்றது.
அதனால் இதற்கான குறுகிய காலத்தில் உள்ள நல்ல தீர்வைப் பெறுவதாயின் அது புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த தேவையை சூரிய மின்நிலையங்களில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். வருடாந்தம் 700 மெகாவேட் படி சேர்க்க முடியும். காற்று மின்நிலையங்களில் மாத்திரம் 400 மெகாவேட் வருடாந்தம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். விறகு மின்சாரமாயின் 200 மெகாவோட் படி வருடாந்தம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
அனைத்து புதுப்பிக்கத்தக்க திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக விரைவான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின்சார முறைமைக்கு பதிலீடு மேற்கொள்வற்காக 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் அதிகரித்துவரும் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக இச்சந்தர்ப்பத்தில் இயற்கை வாயு மின்நிலையத்தை உருவாக்குவதே தீர்வாகும்.