இலங்கை மாணவிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த கௌரவம் !!

ஜப்பான் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிக்கும் விழாவில் இலங்கை மாணவிக்கு கௌரவம் கிடைத்துள்ளது.

slr1

பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் முதல் இடத்தை பிடிப்பதற்கும், மாநாட்டில் உரையாற்றுவதற்கும் இலங்கை மாணவிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஹோமாகம, மீகொட பிரதேசத்தை சேர்ந்த திலினி உபெக்ஷா களுஆராச்சி என்ற மாணவிக்கே இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நுகேகொடை மஹாமாயா மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு விஷாகா பாடசாலையின் பழைய மாணவியான அவர் களனி பலக்லைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பட்டதாரியாகும்.

2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரத்தில் இடம்பெற்ற புவியியல் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் தொடர்பான 7வது சர்வதேச மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்கும் அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்கும் அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

slr2

2016ஆம் அமெரிக்காவின் எரிசோனா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அணு கழிவு மேலாண்மை தொடர்பான மாநாட்டில் ஜப்பான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அவருக்கு அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் அங்கு அவருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஜப்பான் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நிலையான வளர்ச்சி தொடர்பான எம்.எஸ்.சி பட்டதாரியான அவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.