கொழும்பு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

cric

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி அஸ்வினிடம் தரங்கா, கருணரத்ன ஆகியோரை இழந்து ஆட்ட முடிவில் 50 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், சந்திமால் 8 ரன்களுடனும் இன்று (சனிக்கிழமை) ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதில் சந்திமால் 10 ரன்னிலும் குஷால் மெண்டிஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க. அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கை ஆட்டம் கண்டது.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வில்லா மட்டும் தாக்குப்பிடித்து 51 ரன்கள் சேர்த்து ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிய, இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் ரவிசந்திரன் அஸ்வின் 69 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.