கொழும்பு டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் இலங்கை 203 ரன்கள் சேர்ப்பு

கொழும்பு டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸிக்கு 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்துள்ளது.

cricket

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி அஸ்வினிடம் தரங்கா, கருணரத்னே ஆகியோரை இழந்து ஆட்ட முடிவில் 50 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், சந்திமால் 8 ரன்களுடனும் இன்று (சனிக்கிழமை) ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதில் சந்திமால் 10 ரன்னிலும் குஷால் மெண்டிஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கை ஆட்டம் கண்டது.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வில்லா மட்டும் தாக்குப்பிடித்து 51 ரன்கள் சேர்த்து ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிய, இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 69 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை நிதான ஆட்டம்

ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி வீரர்களுக்கு  மீண்டும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருத்தது.

இலங்கை அணியின் ஸ்கோர் 7-ஆக இருக்கும்போது தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸும், கருணரத்னேவும் நிதனாமாக ஆடி இலங்கைக்கு ரன்களை சேர்த்தனர். இதில் சதம் கண்ட குசம் மெண்டிஸ் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை சேர்த்துள்ளது.

கருணரத்னே 92 ரன்னிலும், மலிண்டா புஷ்பகுமாரா 2 ரன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், ஹர்தி பாண்டியா தலா ஒரு விக்கெட்  எடுத்தனர்.