10 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பாவில் கடுமையான வெப்பம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

download (1)

ஐரோப்பா முழுவதும் 40 செல்சியஸ் பாகை வெப்பநிலை அதிகரித்து, கண்டத்தின் வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

கிரேக்கம், குரோஷியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

விசேடமாக இத்தாலியில் தற்போது உடலை எரிக்கும் வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக தீ பரவல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை காலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்து நாடுகளுக்கு உயர் சிவப்பு எச்சரிக்கையை ஐரோப்பிய வானிலை மையம் விடுத்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடைகளுடனே சுற்றுலாப் பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய இத்தாலியில் உள்ள Abruzzoவில் காட்டுத்தீ பரவுவதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.