தெற்கு ஒன்ராறியோவின் நகராட்சியான போர்ட் ஹோப்பிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற கொடூர விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தையடுத்து வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக ஒன்ராறியயோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலோ அல்லது விபத்திற்கான காரணம் தொடர்பிலோ பொலிஸார் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்ததையடுத்து குறித்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இதனால், அப்பகுதியூடாக பயணிப்பதற்கு சாரதிகள் அசௌகரியமடைந்த நிலையில், அவ்வீதி மூடப்பட்டு பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.