அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி : சுருதி அரிஹரன்

அர்ஜுனின் 150-வது படம் ‘நிபுணன்’. இதில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருப்பவர் சுருதி அரிஹரன். இதில் நடித்தது பற்றி கூறிய அவர், “நிபுணன் படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி.

201708051710246419_Its-hard-to-act-with-arjun-says-his-nibunan-pair-Shruti_SECVPF

அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு ‘நிபுணன்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டது பெருமை. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான மனைவியாக, அவருக்கு நேரிடும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும், உடல்நலம் சார்ந்த திடீர் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது.

அதனை திறம்பட செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு ஆக்‌ஷன் படத்தின் நடுவே இழையோடும் குடும்ப கதை. பெண் ரசிகர்கள் இடையே நிபுணன் குழுவின் அசுர உழைப்புக்கு கிடைத்துள்ள தகுந்த வெற்றியாக இந்த வெற்றியை கருதுகிறோம்” என்றார்.

தற்பொழுது துல்கர் சல்மான் நடிப்பில் பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சோலோ’ படத்தில் சுருதி அரிஹரன் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.