கடும் அதிருப்தியில் இந்தியா! குழம்பிப்போன கொழும்பு அரசியல்

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை சீனாவிற்கு வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-china-india-flags

 

இதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களின் தீவிர தன்மையை உணர்ந்து கொண்ட இந்திய மத்திய அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்த குறித்த முக்கியஸ்தர் இந்தியப் பிரதமரின் செய்தியை அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கம் குழப்பம் அடைந்துள்ளதாகவும், இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தினால் பூகோள அரசியலில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இந்தியா அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது.

அத்துடன், இலங்கையில் மீண்டும் சீனா வலுவாக உருவெடுத்து வருவதை அவதானித்த அமெரிக்க இலங்கை அமைச்சர்கள் சிலரை சந்தித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

தற்போது சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் சீன இராணுவ நடவடிக்கைகளுக்கான தடைகள் எந்தளவுக்கு சாத்தியப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளன.

குறித்த உடன்படிக்கையின் மூலம் சீருடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன பாதுகாப்பு படைகள் சீருடையில் செயற்படாவிட்டாலும் சிவில் உடையில் வந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.

எவ்வாறாயினும், இலங்கை மீண்டும் சீன ஆதரவிற்குள் செல்வதில் இந்தியாவுக்குள்ள அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையிலேயே, இந்திய மத்திய அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவரை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.