தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அவசர சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில், அமைச்சுக்கள் எதையும் எதிர்காலத்தில் எதிர்க்கவில்லை எனவும், 13 ஆவது சீர்த்திருத்தம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாகவும் தங்களது முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, முதல்வர் அவரின் பணிகளை சிறப்பாக செயற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தடையாக இருக்க போவதில்லை என்றும் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு தங்களின் முடிவை குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.