நிச்சயம் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் – மகிந்த

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

download (5)

கூட்டு எதிரணியைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

கூட்டு எதிரணியில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும், 32 பேரே மாத்திரமே கையெழுத்திட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களின் கையெழுத்து இதில் இல்லை.

ஏற்கனவே சில முக்கியமான வாக்கெடுப்புகளில் மகிந்த ராஜபக்ச பங்கேற்காத நிலையில், இந்த வாக்கெடுப்பிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டது.

இந்தநிலையிலேயே, நாடாளுமன்றத்தில் தாம் நிச்சயமாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வாக்களிப்பேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.