யாழ். குடாநாட்டில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், ‘பீல்ட்பைக் குறூப்’குவிக்கப்பட்டு வீதிச் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில்பெரும் பதற்றம் நிலவுகின்றது.
போர்க்காலச் சூழலைத் திரும்பவும்நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றன.
துன்னாலையில் 13 பேர் கைது!
வடமராட்சி, துன்னாலையில் நேற்றும் நேற்றுமுன்தினமும் முழுமையானசுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்போது நேற்று 10 இளைஞர்களும், நேற்றுமுன்தினம் 3 இளைஞர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
120ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரும், 80ற்கும் மேற்பட்ட பொலிஸாரும்இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் சிறப்புஅதிரடிப்படையைச் சேர்ந்த ‘பீல்ட்பைக்’ குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முறையான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களும், ஹன்ரர் ரக வாகனங்களும்கைப்பற்றப்பட்டன. அவை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
கடந்த மாதம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதலுடன்தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்திலேயே 13 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர்என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 9ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிதுன்னாலையைச் சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்திருந்தார்.
இதனால் கொதிப்படைந்ததுன்னாலை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் போராட்டம் நடத்தினர். சிறப்புஅதிரடிப்படையினர் மீதும், பொலிஸ் காவலரண்கள் மீதும் தாக்குதல்கள்நடத்தப்பட்டன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 17 பேர் ஏற்கனவேகைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோண்டாவிலில் 12 பேர் கைது!
இதேவேளை, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டவீதிச் சோதனை நடவடிக்கையின்போது 12 இளைஞர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் சிலரிடம் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் வாகனமொன்றில் பயணித்தஅனைவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் மாலை முதல் திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில்விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதிச் சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் பணிபுரிந்து விட்டுபயணித்தவர்களின் வாகனமும் கோண்டாவிலில் சோதனையிடப்பட்டது.
வாகனத்தில் இருந்தவர்களில் சிலரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்பதால்எல்லோருமே கைது செய்யப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் உறவுகள் கோப்பாய் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டுகேட்டபோது, குறித்த இளைஞர்களை விசேட அதிரடிப் படையினரே கைது செய்தமையால்அவர்களின் அறிக்கையின் பின்பே விடுவிக்க முடியும் எனக் கைவிரித்து விட்டனர்என்று கூறப்பட்டது.
அல்வாய்ப் பகுதியில் 18 பேர் கைது
வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெற்ற இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.