மனிதனுக்கு உயிரணுக்களால் பிறவிலேயே ஏற்படும் உடல்குறைபாடுகளை தடுக்கவும், ஆரோக்கியமான மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறையை கண்டுபிடித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் உடல் குறைபாடுகள் குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில், உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை சேர்க்கும் முறையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆராச்சியின் மூலம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் குறைபாடுகள் அறவே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.