பிரெக்சிற்றிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு பிரித்தானிய குடிமக்கள் அனுமதி பெற வேண்டும் என புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்ட ஐரோப்பிய பயண வழிமுறைகளை மேற்கோள்காட்டி குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய சுற்றுலா தகவல் மற்றும் அங்கீகார முறைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், விசா விலக்களிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பிரஜைகளாகவே கருதப்படுவர் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு விஜயம் செய்ய எத்தணிக்கும் பிரித்தானியர்கள், 5 பவுண்ட் செலுத்தி இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனை தொடரை தமது அடையாளத்தை உறுதிபடுத்தும் வகையில் பயண ஆவணம், குடியிருப்பு தகவல், தொடர்பு விபரங்கள், கல்வி தகைமை மற்றும் தற்போதைய பணி போன்ற விபரங்களை வழங்குவது அவசியம்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தல் போன்ற காரணங்களுக்காகவே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.