ஐ.எஸ் தீவிரவாதிக்கு 20 வருட சிறை தண்டனை!

பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய குற்றத்திற்காக ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Is_00460

சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு தூதரக, அதிகாரிகள் மற்றும் சவுதியின் வடக்கு எல்லையில் உள்ள அரார் விமான நிலையங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர், சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் சவுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தீவிரவாதிகளுக்கு சவுதி நீதிமன்றங்களில் ஊடாக தண்டனைகள் விதிக்கப்பட்டுவருகின்றது.

இவற்றில் அதிகபட்ச தண்டனையாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.