“‘விவேகம்’ போன்ற உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இயக்குனர் சிவாவின் காட்சிப்படுத்தல் முறையும் அவரது தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பிறகு தான், அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார், எவ்வளவு பிரபலம் என்பதை தெரிந்துகொண்டேன்.
படப்பிடிப்பில் மிகவும் எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ‘டூப்’ வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் திறம்பட செய்து அசத்தினார். அவர் கடின உழைப்பாளி. படப்பிடிப்புக்கு இடைப்பட்ட நேரங்களில் அவருடன் உரையாடியது என் மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள்” என்றார்.